​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களை பயன்படுத்தும் திட்டம்

Published : May 16, 2019 1:10 PM

பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களை பயன்படுத்தும் திட்டம்

May 16, 2019 1:10 PM

பொருட்களை டெலிவரி செய்வதற்கும், தாழ்நிலை வான்வழிப் போக்குவரத்து ஏர்-டாக்சியாகவும் ட்ரோன்களை பயன்படுத்துவது தொடர்பான சாத்தியங்கள் குறித்து விமானப் போக்குவரத்து இயக்குனரகம் ஆய்வு செய்ய உள்ளது.

தொலைவிலிருந்து இயக்கப்படும் ஆளில்லா உளவு விமானங்கள் என்ற அடிப்படையில் ட்ரோன்கள் பாதுகாப்புத்துறையில் பயன்படுகின்றன. புகைப்படம் எடுப்பது, கண்காணிப்பது, வரைபடங்கள் தயாரிப்பது, பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

2023ஆம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் டல்லாஸ், லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட 3 நகரங்களில், ட்ரோன்களை பயன்படுத்தி ஏரியல் டாக்சி சேவைகளை வழங்க உபேர் எலிவேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தொலைவில் இருந்து இயக்கப்படும் விமானங்களை, பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வுசெய்ய ஆர்வமுள்ள வல்லுநர்கள் அணுகலாம் என விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.