​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில், முதல் சுற்று கலந்தாய்வு

Published : May 16, 2019 12:32 PM

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில், முதல் சுற்று கலந்தாய்வு

May 16, 2019 12:32 PM

சென்னை எழும்பூரிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
எத்திராஜ் மகளிர் கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளாக ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் மொத்தமுள்ள 30 பிரிவுகளுக்கான, 2400 இடங்களுக்கு 25 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

அதன்படி வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், இன்றும் நாளையும் முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது. இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.