​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியாக சென்ற பெண்ணிடம் இருவர் செயின் பறிப்பு

Published : May 16, 2019 12:25 PM

தனியாக சென்ற பெண்ணிடம் இருவர் செயின் பறிப்பு

May 16, 2019 12:25 PM

டெல்லியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணை தாக்கி இரண்டு பேர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

டெல்லியின் இந்தர்புரி பகுதியில் கடந்த 13ம் தேதி சாலையில் தனியாக சென்று கொண்டு இருந்த பெண்ணை எதிரில் பைக்கில் வந்த இரண்டு பேரில் ஒருவர் தாக்கி கீழே தள்ளி அவர் அணிந்திருந்த செயினை பறித்தார். பின்னர் மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில் சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதைக்கொண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.