​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்: 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை, ராணுவ வீரர் உயிரிழப்பு

Published : May 16, 2019 8:37 AM

புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்: 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை, ராணுவ வீரர் உயிரிழப்பு

May 16, 2019 8:37 AM

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். புல்வாமா மாவட்டத்தின் தலிபோரா என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தினர், துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து அதிகாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தீவிரவாதிகளுக்கும் வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.

மேலும் 2 வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் வசமிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

தேடுதல் வேட்டையை முன்னிட்டு சம்மந்தப்பட்ட பகுதியில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.