2000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
Published : May 16, 2019 7:53 AM
ரஷ்யாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேட்டையாடுபவரின் எலும்புக் கூடு ஆயுதங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடலை ஒட்டிய பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தை அகழ்ந்து கொண்டிருந்த போது சில விசித்திரப் பொருட்களைக் கண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த தொல்பொருள் ஆய்வுத்துறையினர் நடத்திய சோதனையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வேட்டையாடி ஒருவரின் எலும்புக் கூடு முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த எலும்புக் கூட்டின் அருகில் தங்கம் மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட அணிகலன்கள், பாத்திரங்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
மேலும் அவரின் கைகள் வாளைப் பற்றியவாறு இருந்ததால் வேட்டையின் தருணத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.