​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கமலுக்கு எதிராக 40 புகார் மனு : முன்ஜாமீன் கோரிய மனு மீது இன்று விசாரணை

Published : May 16, 2019 7:44 AM

கமலுக்கு எதிராக 40 புகார் மனு : முன்ஜாமீன் கோரிய மனு மீது இன்று விசாரணை

May 16, 2019 7:44 AM

அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது.

மனுதாரர் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தால் பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இதனிடையே, கமல்ஹாசன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.