​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீன தொழில்நுட்பத் துறைக்கு அமெரிக்கா வைத்த செக்

Published : May 16, 2019 7:31 AM

சீன தொழில்நுட்பத் துறைக்கு அமெரிக்கா வைத்த செக்

May 16, 2019 7:31 AM

அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படுவதற்கு எதிரான தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்யும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக யுத்தம் நடைபெற்று வரும் நிலையில் சீனப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது.

இந்நிலையில், ஹூவாய் போன்ற சீன நிறுவனங்களுடன் தங்கள் நாட்டு நிறுவனங்கள் வர்த்தகம் செய்வதைத் தடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அந்நிய மற்றும் எதிரி நாடுகள் அமெரிக்காவின் தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தை அபகரிப்பதாக தெரிவித்த டிரம்ப் இதனைத் தடுக்க தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அறிவித்துள்ளார்.

களவாடப்படும் தொழில்நுட்பத்தால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை பாதுகாக்க இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.