​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் மம்தா பானர்ஜி அதிருப்தி

Published : May 16, 2019 6:21 AM

தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் மம்தா பானர்ஜி அதிருப்தி

May 16, 2019 6:21 AM

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நாளையுடன் முடிய உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஒருநாள் முன்னதாக இன்றுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அங்கு பாஜக-திரிணாமூல் இடையே எழுந்த மோதல் காரணமாக வன்முறை தலைவிரித்தாடுகிறது. இதனை காரணமாக காட்டி தேர்தல் ஆணையம் ஒருநாள் முன்னதாகவே பிரச்சாரத்தை முடிக்க அரசியல் கட்சிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதையடுத்து மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறும் 9 தொகுதிகளில் இன்று இரவுடன் பிரச்சாரம் ஓய்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு குறித்து அதிருப்தி வெளியிட்ட மம்தா பானர்ஜி, மோடி அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தெரிவித்தார்.