​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விளைநிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை நிறுத்த விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை

Published : May 15, 2019 9:20 PM

விளைநிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை நிறுத்த விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை

May 15, 2019 9:20 PM

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே விளைநிலங்கள் வழியாக பதிக்கப்பட்டு வரும் கெயில் எரிவாயு குழாய் பணியை நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாதானத்திலிருந்து - மேமாத்தூர் வரை கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக காளகஸ்தினாதபுரத்தில் மிகப்பெரிய குழாய்கள் இறக்கப்பட்டன.

அதனை அப்பகுதியில் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்த இடத்தில் பதிக்கும் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. விளைநிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பருத்தி செடிகள் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

இப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் பணியை கைவிட வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றனர்.