​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு அறிவிப்பு

Published : May 15, 2019 7:31 PM

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு அறிவிப்பு

May 15, 2019 7:31 PM

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்த பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் வருகை புரியாதவர்கள், ஜூன் மாதம் நடைபெறவுள்ள தேர்வுக்கு சிறப்பு அனுமதித்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நாளையும், நாளை மறுநாளும்
தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.