​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போயிங் நிறுவன விமான வர்த்தகம் கடும் வீழ்ச்சி

Published : May 15, 2019 7:23 PM

போயிங் நிறுவன விமான வர்த்தகம் கடும் வீழ்ச்சி

May 15, 2019 7:23 PM

போயிங் நிறுவனத்தின் விமான வர்த்தகமானது, கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் எனும் ரகத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள், இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளாகி 346 பேர் உயிரிழந்தனர்.

ஒரே மாதிரியான தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த இரு விபத்துகளும் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், போயிங் நிறுவனத்தின் வர்த்தகமானது தற்போது கடும் சரிவைச் சந்துள்ளதாகவும், ஏப்ரல் மாத கணக்கின்படி, அந்நிறுவன விமானங்களை வாங்க யாருமே வாங்க முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

முக்கிய வகைகளான 737 மேக்ஸ் ஜெட்ஸ், 787 ட்ரீம்லைனர் மற்றும் 777 உள்ளிட்ட அந்நிறுவனத்தின் முன்னணி வகைகளை வாங்கவும் யாரும் ஆர்வம் காட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து ஏற்பட்ட இரு விமான விபத்துகளே இந்த விற்பனை பாதிப்பிற்கான முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.