​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை..!

Published : May 15, 2019 7:21 PM

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை..!

May 15, 2019 7:21 PM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ரோஜா செடிகளை பாதுகாக்கும் பசுமை குடில்கள் சேதமாகி பறந்தன.

சேலம் நகருக்கு உட்பட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அருவங்காடு, வெலிங்டன் உள்ளிட்ட இடங்களில், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்றுவட்டாரத்திலும் பரவலாக மிதமான மழை பெய்தது.

தேனி மாவட்டம் பெரியகுளம், சோத்துப்பாறை, தாமரைக்குளம் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருகூர்,ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், காந்திபுரம், ஆர் எஸ் புரம், ரயில் நிலையம், துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்று வட்டார பகுதிகளில்   சூறை காற்றுடன்  ஆலங்கட்டி மழை பெய்தது. கமுதி, கோட்டைமேடு, பசும்பொன் ,நாரயணபுரம்,கண்ணார் பட்டி   உள்ளிட்ட இடங்களில் சூறை காற்றுடன் பெய்த  ஆலங்கட்டி  மழையால்   விவசாயிகள்,மற்றும்  பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.