​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் ஐஜி செந்தாமரைக்கண்ணன் இடமாற்றம்

Published : May 15, 2019 7:13 PM

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் ஐஜி செந்தாமரைக்கண்ணன் இடமாற்றம்

May 15, 2019 7:13 PM

சென்னை உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட  விவகாரத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய போலீஸ் ஐஜி  செந்தாமரைக்கண்ணன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட் டார்.

காவல்துறை கைரேகைப் பிரிவு எஸ்ஐ பணிக்கு நடந்த எழுத்துதேர்வில் காவலர் அருணாச்சலம்  கணிதம் தொடர்பான ஒரு கேள்விக்கு அளித்த பதில் தவறு என மதிப்பெண் அளிக்காததால் பணியிடம் கிடைக்க வில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தாக்கல் செய்த பதில்அறிக்கை போலியானது என தெரியவந்தது.

இதனால் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜி செந்தாமரைக் கண்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்வதாக நீதிமன்ற்ம் தெரிவித்தது. இந்த நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்து உள்துறைசெயலர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவருக்கு பதில் தலைமையிடத்து ஐஜி வித்யா ஜெயந்த் குல்கர்னி சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்