​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
773 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்ட ஓவியம்

Published : May 15, 2019 6:56 PM

773 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்ட ஓவியம்

May 15, 2019 6:56 PM

பிரென்ச் ஓவியர் கிளாட் மொனெட்டின் ஓவியம் ஒன்று 773 கோடி ரூபாய்க்கும் மேல் ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப்படைத்துள்ளது.

புகழ் பெற்ற பிரென்ச் ஓவியர் கிளாட் மொனெட்டின் ஹேஸ்டாக்ஸ் (Haystacks) சீரிஸ் ஓவியங்களின் ஒரு ஓவியம் 1986ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஏலத்திற்கு வந்தது.

நியூயார்க்கில் உள்ள சோத்பி(Sotheby)ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்ட அந்த ஓவியம் 110.6 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகி உள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 773 கோடியாகும்.

இந்த ஓவியம் முன்பு ஏலத்தில் எடுக்கப்பட்டதை விட இது 40 சதவீதம் அதிகமான தொகையாகும். இந்த ஓவியம் 8 நிமிடங்களில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மொனெட்டின் ஓவியங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஓவியம் இது என்பது குறிப்பிடத்தக்கது.