​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தான் பேசியது சரித்திர உண்மை - கமல்ஹாசன் திட்டவட்டம்

Published : May 15, 2019 6:35 PM

தான் பேசியது சரித்திர உண்மை - கமல்ஹாசன் திட்டவட்டம்

May 15, 2019 6:35 PM

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று தான் பேசியது சரித்திர உண்மை என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தன்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க முயற்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். தோப்பூர், சாமநத்தம், பனையூர், வில்லாபுரம், அனுப்பானடி ஆகிய இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், அரவக்குறிச்சியில் தான் பேசியது சரித்திர உண்மை என்றார். தான் கலகத்தை விளைவிப்பதாக குற்றம்சாட்டுவது தனது உள்மனதை புண்படுத்துவதாக கமல் தெரிவித்தார். தேர்தல் அரசியலுக்கு வந்த பிறகு எப்படி ஒரு சார்பு நிலையை தான் எடுப்பேன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், தம்மை இந்து விரோதி போல காட்டப் பார்ப்பதாகத் தெரிவித்தார்.

முன்னதாக கமல் பேச்சை தொடங்கும் முன்னர் அனுமன் சேனா என்கிற அமைப்பை சேர்ந்த 11 பேர் கமலுக்கு எதிராக கோஷம் போட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து அங்கு முழக்கமிட்ட 11 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.