​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேஸ்புக் நேரலையில் புதிய கட்டுப்பாடுகள்

Published : May 15, 2019 6:15 PM

பேஸ்புக் நேரலையில் புதிய கட்டுப்பாடுகள்

May 15, 2019 6:15 PM

 

நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து லைவ் வசதியில் கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் கிரிஸ்ட்சேர்ச் பகுதியில் 51 பேரின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தாக்குதல் நடத்திய நபரால் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டது.

இது உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் லைவ் வசதியில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.

அதன்படி, பேஸ்புக்கில் விதிமீறலில் ஈடுபடுவோர் லைவ் வசதியை பயன்படுத்த உடனடியாக 30 நாட்களுக்கு தடை விதிக்கப்படும்.

தொடர்ந்து விதிகளை மீறுபவர்களுக்கு லைவ் வசதி நிரந்தரமாக முடக்கப்படும். மேலும் அவர்களால் பேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்யவும் முடியாது.