​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில் நிலையங்களில் தமிழ் தெரிந்தவர்களை பணியமர்த்தக் கோரிய வழக்கில் தென்னக ரயில்வே பதிலளிக்க உத்தரவு

Published : May 15, 2019 5:41 PM

ரயில் நிலையங்களில் தமிழ் தெரிந்தவர்களை பணியமர்த்தக் கோரிய வழக்கில் தென்னக ரயில்வே பதிலளிக்க உத்தரவு

May 15, 2019 5:41 PM

தமிழகத்தில் ரயில்வே துறையின் முக்கிய பொறுப்புகளில் தமிழ் தெரிந்தவர்களை பணியமர்த்தக் கோரிய வழக்கில், தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த மணவாளன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பணியாற்றும் 15 முதல் 20 சதவீத ரயில்வே ஊழியர்கள் தமிழ் தெரியாதவர்களாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் கள்ளிக்குடி - திருமங்கலம் இடையே எதிர் எதிர் திசையில் ரயில்கள் சென்ற சம்பவம் நிகழ, மொழி பிரச்னையே காரணம் என கூறப்படும் நிலையில், திருச்சி மண்டலத்தில் பணியாற்றும் 2,145 கார்டுகளில் பெரும்பாலானவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்தில் ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், கார்டுகள் உள்ளிட்ட முக்கிய ரயில்வே பணிகளில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.