​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த வீரேந்தர் சேவாக்..!

Published : May 15, 2019 5:26 PM

ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த வீரேந்தர் சேவாக்..!

May 15, 2019 5:26 PM

ஹர்திக் பாண்டியாவின் திறமைக்கு இணையான வீரர் இந்திய அணியில் இல்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் அந்த அணியின் ஹர்திக் பாண்டியா. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் பாண்டியா நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஹர்திக் பாண்டியாவின் திறமைக்கு இணையாக இந்திய அணியில் வேறு எந்த வீரரும் இல்லை என்று கூறினார். மேலும், சமீபகாலமாக தவிர்க்க முடியாத வீரராக ஹர்திக் பாண்டியா உருவாகி இருப்பதாகவும் சேவாக் புகழ்ந்துள்ளார்.