​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகக்கோப்பை தொடரில் ரிஷப் பந்த்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் ஏன்? கோலி விளக்கம்

Published : May 15, 2019 5:19 PM

உலகக்கோப்பை தொடரில் ரிஷப் பந்த்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் ஏன்? கோலி விளக்கம்

May 15, 2019 5:19 PM

அனுபவத்தின் காரணமாகவே உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டதாக விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். இளம் வீரர் ரிஷப் பந்த், பேட்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அனுபவம் காரணமாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் தோனி விளையாட முடியாத நிலையில் தினேஷ் கார்த்திக் அந்த இடத்தை நிரப்ப சரியான தேர்வு என்றும் அவர் கூறினார்.