​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு

Published : May 15, 2019 5:00 PM

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு

May 15, 2019 5:00 PM

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது.

இரண்டு தாள் அடங்கிய இந்த தேர்வுக்கு மொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் முதல் தாள் தேர்வு வரும் ஜூன் 8ஆம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஜூன் 9ஆம் தேதியும் காலை 10 முதல் 1 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து கூடுதல் தகவல்களை http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பெறலாம்.