​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலனை ஆள் வைத்து கடத்திய டென்னிஸ் வீராங்கணை கைது

Published : May 15, 2019 4:55 PM

காதலனை ஆள் வைத்து கடத்திய டென்னிஸ் வீராங்கணை கைது

May 15, 2019 4:55 PM

சென்னையில் காதலனை ஆள் வைத்து கடத்திய வழக்கில் அவரது காதலியான டென்னிஸ் வீராங்கனையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்கா தப்பிச் செல்ல முயன்ற வீராங்கனை, அவரது கூட்டாளிகளுடன் சிக்கிய பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச் சேர்ந்த நவீத் அகமது, லயோலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டுபடித்து வந்தார். கடந்த சனிக்கிழமை சேத்துப்பட்டு அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நவீத் அகமதுவை, மர்ம நபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர்.

கத்திபாரா பாலத்துக்கு கீழே நவீத் அகமதுவை அந்தக் கும்பல் அடித்து உதைத்து அவரது ஐபோனை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய டி.பி. சத்திரம் போலீசார், வேளச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர், சரவணன் ஆகியோரை முதலில் கைது செய்தனர்.

இதில் கைதான பாஸ்கர் வடபழனி மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலரின் மகன். இந்த இருவரிடமும் நடத்திய விசாரணையில் நவீத்தின் செல்போனை பறிக்கவே கடத்தியதாக வாக்குமூலம் கொடுத்தனர். செல்போனை பறிக்க , நவீத்தின் காதலி தான் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டார் என கண்டுபிடிக்கப்பட்டது.

காதலில் பிரச்சனை ஏற்பட்டு, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என நவீத் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், தனது நண்பர்கள் மூலம் கடத்தி அந்த செல்போனை பறிக்க டென்னிஸ் வீராங்கணை வாசவி திட்டமிட்டுள்ளார்.

சென்னை ராயபுரத்தை பூர்வீகமாக கொண்ட வாசவி டென்னிஸ் விளையாட்டு வீராங்கணை. மாநில அளவிலும், இந்தியாவில் நடந்த பல்வேறு தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். அமெரிக்காவில் படித்து வரும் வாசவி அங்கேயே டென்னிஸ் பயிற்சி பெற்று வந்தார்.

image

இந்த நிலையில் வாசவியை தேடி வரும் தகவல் தெரிந்து அவர் அமெரிக்கா செல்ல முயன்றார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வைத்து வாசவியை கைது செய்தனர்.

image

மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நுங்கம்பாக்கம் கோகுல், அரும்பாக்கம் அபிசேக் ஆகியோரையும் வாசவி மூலம் போன் செய்ய வைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளி மாணவன் ஒருவனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

image

கடத்தலுக்கு காரணமான ஆபாச படங்கள் உள்ள செல்போனை நவீத்திடம் இருந்து பறித்த அவர்கள் கழிவு நீர் கால்வாயில் வீசியுள்ளதாக கூறும் போலீசார், இந்த விவகாரத்தில் தவறான வழியில் செல்லாமல் போலீசாரிடம் புகார் கொடுத்திருந்தால் காதலனை கைது செய்திருக்கலாம் என கூறுகின்றனர்.