​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட நால்வர் 2 நீதிமன்றங்களில் சரண்

Published : May 15, 2019 4:42 PM

ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட நால்வர் 2 நீதிமன்றங்களில் சரண்

May 15, 2019 4:42 PM

சென்னையில் 17 வயது சிறுமி திருமணத்தை, தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேர், இருவேறு நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர். அயனாவரம் திக்கா குளம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெபசீலன், தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மனைவியுடன் பைக்கில் சென்றபோது, வெட்டிக்கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில், அதேபகுதியைச் சேர்ந்த சாய் கிருஷ்ணா, உதயகுமார் ஆகியோர், எழும்பூர் நீதிமன்றத்திலும், சரவணன், வெள்ளை பிரசாத் ஆகியோர் அம்பத்தூர் நீதிமன்றத்திலும் சரணடைந்துள்ளனர். இந்த 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அயனாவரம் திக்கா குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம், 17 வயதான சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் ஜெபசீலன் நிறுத்தியதாக கூறி, தகராறு இருந்து வந்த நிலையிலேயே வெட்டிக்கொல்லப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.