​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
21 மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு தடை..!

Published : May 15, 2019 4:30 PM

21 மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு தடை..!

May 15, 2019 4:30 PM

விருதுநகர் மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி செயல்படும் 21 மினரல்  வாட்டர் நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அழகாபுரியை சேர்ந்த, விடியல் வீர பெருமாள் என்பவர் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், விருதுநகரில் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக நோக்கில் பயன்படுத்தும் தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்கள் மீது குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு, விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் 21 தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்களும் நிலத்தடி நீரை எடுக்க இடைக்கால தடை விதித்து  வழக்கை ஒத்திவைத்தனர்.