​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதாவுக்கு தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது- பிரதாப் ரெட்டி

Published : May 15, 2019 4:25 PM

ஜெயலலிதாவுக்கு தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது- பிரதாப் ரெட்டி

May 15, 2019 4:25 PM

ஜெயலலிதாவுக்கு மிக சிறப்பான சிகிச்சை கொடுக்கப்பட்டதாக அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார். ஓமன் நாட்டு பெண்ணிற்கு சென்னை தரமணியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை எலும்பு மஜ்ஜையில் இருக்கக்கூடிய புற்றுநோயை புரோட்டான் கதிர்வீச்சு மூலமாக சரிசெய்து குணப்படுத்தி உள்ளது.

உலகளவில் அமெரிக்கா,இத்தாலிக்கு அடுத்து இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை உலக அளவில் தரம் வாய்ந்தது என்றும் சிகிச்சையின் போது நான்கு வாரகாலம் ஜெயலலிதா அருகில் தான் இருந்ததாகவும் கூறினார்.