​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாக்குகளை எண்ணுவது தொடர்பாக சென்னையில் பயிற்சி

Published : May 15, 2019 4:18 PM

வாக்குகளை எண்ணுவது தொடர்பாக சென்னையில் பயிற்சி

May 15, 2019 4:18 PM

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

வரும் 23ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடக்கிறது. பதிவான வாக்குகளை குறிப்பிட்ட அளவில் ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்று எண்ணுவது புதிய நடைமுறை என்பதால் இதுதொடர்பாக சென்னை சின்னமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு, துணை ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, உமேஷ் சின்ஹா, தேர்தல் செலவின இயக்குனர் திலிப் சர்மா ஆகியோர் பயிற்சி வழங்கினர்.

இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர்.