​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கணினி நிலையத்திற்குள் புகுந்து கடை ஊழியரே கொள்ளையடித்தது சிசிடிவியில் அம்பலம்

Published : May 15, 2019 3:17 PM

கணினி நிலையத்திற்குள் புகுந்து கடை ஊழியரே கொள்ளையடித்தது சிசிடிவியில் அம்பலம்

May 15, 2019 3:17 PM

நாமக்கல்லில் கணினி நிலையம் ஒன்றில் 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளைபோன சம்பவத்தில் கடை ஊழியரே பணத்தை கொள்ளையடித்தது சிசிடிவி காட்சியில் அம்பலமாகியுள்ளது.

ராஜகோபால் என்பவருக்குச் சொந்தமான கணினி நிலையம் ஒன்றிலிருந்து ஐந்து லட்ச ரூபாய் பணம் திருடுபோயுள்ளது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பர்தா அணிந்துகொண்டு முகத்தை மூடியபடி வரும் நபர் ஒருவர், கடைக்குள் சென்று பணத்தை திருடுவதுபோன்ற காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.

இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், அதே கடையில் வேலை செய்த உதயசூரியன் என்பவரை கைது செய்தனர்.

கடையின் பூட்டை உடைக்காமல் இந்த கொள்ளை நடந்ததால் கடை ஊழியர்களே இந்த கொள்ளையை அரங்கேற்றியிருக்கலாம் என்ற கோணத்தில் நடந்த விசாரணையில் அந்த நபர் பிடிபட்டுள்ளார். கொள்ளைபோன பணமும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.