​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலைக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரன்வீர் ஷாவின் மனு தள்ளுபடி

Published : May 15, 2019 3:07 PM

சிலைக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரன்வீர் ஷாவின் மனு தள்ளுபடி

May 15, 2019 3:07 PM

சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரன்வீர்ஷாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திருப்பி வழங்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பழங்கால சிலைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வழக்கில்  தொடர்புடைய ரன்வீர் ஷாவுக்கு முன்ஜாமீன் வழங்கி அவரின் பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வெளிநாட்டில்  உடல்நிலை சரி இல்லாமல் உள்ள தனது தாயை பார்க்க வேண்டும் என்பதால், பறிமுதல் செய்யப்பட்ட தனது பாஸ்போர்ட்டை திருப்பி தர கோரி ரன்வீர் ஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, ரன்வீர் ஷாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.