​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளி வாகனங்களில் ஆய்வு

Published : May 15, 2019 2:45 PM

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளி வாகனங்களில் ஆய்வு

May 15, 2019 2:45 PM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி வாகனங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் பள்ளி வாகனங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இங்குள்ள நகராட்சி ஆண்கள் நடுநிலைப்பள்ளி வளாகத்தில், பழனி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவசர கால வழி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை மேலையூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. மொத்தம் 284 வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறைபாடுகள் கொண்ட 26 வாகனங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டன. 

சென்னை திருவெற்றியூரில் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.