​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை என்பது வடிக்கட்டிய பொய் -நாராயணசாமி

Published : May 15, 2019 2:28 PM

பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை என்பது வடிக்கட்டிய பொய் -நாராயணசாமி

May 15, 2019 2:28 PM

பாஜகவுடன் திமுக கூட்டணி குறித்து பேசி வருவதாக கூறுவது வடிகட்டிய பொய் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீவிரவாதம் என்பது ஒரு மதத்தை சார்ந்தது அல்ல, எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர் என்றும் கமல் எந்த நோக்கத்தில் கோட்சே குறித்து பேசினார் என்பது தெரியவில்லை என்றும் கூறினார்.

மேலும் பாஜகவுடன் திமுக கூட்டணி குறித்து பேசி வருவதாக தமிழிசை கூறியிருப்பது வடிகட்டிய பொய் எனவும் கூறினார்.