​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாடல் நிகழ்ச்சியின் போது கல்வீச்சு - வீடுகள், வாகனங்கள் அடித்து சேதம்

Published : May 15, 2019 1:24 PM

பாடல் நிகழ்ச்சியின் போது கல்வீச்சு - வீடுகள், வாகனங்கள் அடித்து சேதம்

May 15, 2019 1:24 PM

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், வீடுகள் வாகனங்களை அடித்து நொறுக்கிய ஒரு பிரிவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, மற்றொரு பிரிவினர் சாலை மறிலில் ஈடுபட்டனர்.

கமலக்கன்னியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பாடல் நிகழ்ச்சியில், ஒரு பிரிவினரை புகழ்ந்து பாடல் பாடப்பட்டதால் மற்றொரு பிரிவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட பிரிவினரின் வீடு மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரி, விழுப்புரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதனால் அவர்கள் லேசான தடியடி மூலம் கலைப்பட்டனர். அங்கு பதற்றம் நிலவியதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.