​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 5 பேர் படுகாயம்

Published : May 15, 2019 1:16 PM

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 5 பேர் படுகாயம்

May 15, 2019 1:16 PM

விருதுநகர் மாவட்டம் வரகனூர் அருகே, பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த விபத்து ஒன்றில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த ஆலையானது மூடி சீல் வைக்கப்பட்டது.  இந்த நிலையில், அந்த ஆலைக்கு அருகில் இருந்த முட்புதர்களை சுத்தம் செய்யும் பணியில் மாங்குடி எனும் பகுதியைச் சேர்ந்த சிலர் தற்போது ஈடுபட்டிருந்துள்ளனர்.

அப்போது, அவர்கள் சமையல் செய்த பகுதியிலிருந்து நெருப்பு பரவி, அருகில் இருந்த பட்டாசு ஆலைக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட வெடி விபத்தில், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர்  காயமடைந்தனர். உடலில் தீக்காயங்கள் ஏற்பட்ட  நிலையில் சிவகாசி மருத்துவமனைக்கு அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.