​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கு

Published : May 15, 2019 1:10 PM

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கு

May 15, 2019 1:10 PM

வாக்குக்கு பணம் கொடுப்பது அதிகரித்துள்ளதால், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,  தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வாக்கு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால், இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை என்றும், எனவே தேர்தலை ரத்து செய்யவோ, ஒத்திவைக்கவோ வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட இயலாது என்றும், தேவைப்படும் பட்சத்தில் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.