​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Published : May 15, 2019 12:44 PM

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக தாக்கல் செய்த மனு தள்ளுபடி

May 15, 2019 12:44 PM

கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும் அது நாதுராம் கோட்சே என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசி இருப்பதை எதிர்த்து பாஜக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கமலின் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் கமல்ஹாசன், இவ்வாறு பேசி இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்தனர். தமிழ்நாட்டில் நடந்த விவகாரம் குறித்து டெல்லியில் வழக்கு

தொடர்வது ஏன் எனக் கேட்டு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.