​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவெடிக்கை - தமிழக அரசு

Published : May 15, 2019 12:30 PM

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவெடிக்கை - தமிழக அரசு

May 15, 2019 12:30 PM

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான அறிவுரைகள் அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் கருப்பசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் பணிகளை கோடை விடுமுறையிலேயே முடிக்க வேண்டும் என்றும் அங்கு படிக்கும் குழந்தைகளில் 5 வயது நிரம்பியவர்கள், பள்ளி அருகே உள்ள குடியிருப்புகளில் 5 வயது நிரம்பியுள்ள குழந்தைகள் மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர் சேர்க்கை சார்ந்த தகவல்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள், பலகைகள் மூலம் விளம்பரப்படுத்தவும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டங்களை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விழிப்புணர்வு பேரணிகளில் பள்ளி மாணவர்களை கட்டாயம் பங்கு பெற செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது