​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கும் திருக்குறள்

Published : May 15, 2019 12:10 PM

புதுச்சேரியில் வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கும் திருக்குறள்

May 15, 2019 12:10 PM

புதுச்சேரியில், மாணவர்கள் பயன்பெறும் வகையில் வீட்டுச் சுவர்களில் எழுதப்பட்டுவரும் திருக்குறளுக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு நிலவிவருகிறது.

அங்குள்ள நைனார்மண்டபம் எனும் பகுதியில் இயங்கிவரும் மக்கள் நல மையம் எனும் அமைப்பினர், மாணவர்களுக்கு விளையாட்டு, கல்வி தொடர்பாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள வீட்டு சுவர்களில் தமிழ் மறையாக கருதப்படும் திருக்குறளை அழகுடன் எழுதிவருகின்றனர்.

இதற்கு அப்பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், தங்களது வீடுகளில் வந்து எழுதுமாறும் பொதுமக்கள் தாமாக முன்வந்து கோரிக்கை வைக்கின்றனர். சுவற்றில் எழுதப்பட்ட குறள்களை சுட்டிக்காட்டும் பெரியவர்கள், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அதன் அர்த்தங்களையும் கற்பித்துவருகின்றனர்.