​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வென்று தி.மு.க ஆட்சியமைக்கும் - ஸ்டாலின்

Published : May 15, 2019 11:04 AM

இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வென்று தி.மு.க ஆட்சியமைக்கும் - ஸ்டாலின்

May 15, 2019 11:04 AM

இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வென்று, தி.மு.க ஆட்சியமைக்கும் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் டாக்டர்.சரவணனை ஆதரித்து, சிலைமான் பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதில் மட்டுமே கவனம் உள்ளதாக கூறினார். எம்.ஜி.ஆருக்கே தலைவராக இருந்த கருணாநிதிக்கு 6 அடி நிலம் தர மறுத்த அ.தி.மு.க அரசுக்கு, தமிழகத்தில் இடம்தரக்கூடாது என வாக்காளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.