​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனக்கு பினாமி சொத்து இருப்பதை நிரூபிக்க முடியுமா? - மோடி சவால்

Published : May 15, 2019 9:20 AM

தனக்கு பினாமி சொத்து இருப்பதை நிரூபிக்க முடியுமா? - மோடி சவால்

May 15, 2019 9:20 AM

தனக்கு பினாமி சொத்து இருப்பதை நிரூபிக்க முடியுமா? என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி சவால் விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பால்லியா மாவட்டத்தில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து செல்வந்தர் ஆக வேண்டும் என கனவிலும் நினைத்ததில்லை என்று கூறினார்.

அதற்கு மாறாக, சிறு வயதில் தனக்குக் கிடைக்காத வசதிகளை ஏழைகளுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் சேவை புரிய எண்ணுவதாகவும் மோடி தெரிவித்தார். தாம் பண்ணை வீடு கட்டி இருப்பதாகவும், வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைத்திருப்பதாகவும் கூறும் எதிர்க்கட்சிகளால் அதை நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுத்தார். எதிர்க்கட்சியினரும், அவர்களது உறவினர்களும் பங்களா உள்ளிட்ட சொத்துக்களை வாங்கி குவிப்பதாகவும் மோடி குற்றம்சாட்டினார்.