​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாக்பீசில் 1330 திருக்குறளை எழுதி பிளஸ் 2 மாணவர் சாதனை

Published : May 15, 2019 8:13 AM

சாக்பீசில் 1330 திருக்குறளை எழுதி பிளஸ் 2 மாணவர் சாதனை

May 15, 2019 8:13 AM

சிவகங்கை மாவட்டத்தில் சாக்பீஸில் 1330 திருக்குறள் எழுதி +2 மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

கல்லல் அருகே உள்ள செம்மனூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சாதனை மீது தாகம் கொண்ட சந்தோஷ் கடந்த 2017ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது 5 மீட்டர் தூரம் எடுக்கக்கூடிய எஃப்.எம். ரேடியோ ஸ்டேஷனை தானே உருவாக்கி சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்து 463 சாக்பீஸை பயன்படுத்தி ஆயிரத்து 330 திருக்குறள்களை எழுதி சாதனை படைத்துள்ளார். மாணவர் சந்தோஷின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.