​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர் விபத்தில் உயிரிழப்பு

Published : May 15, 2019 7:47 AM



ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர் விபத்தில் உயிரிழப்பு

May 15, 2019 7:47 AM

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் சென்னையில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.

ஷெனாய் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் 2010ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தற்போது அமெரிக்காவில் பணியாற்றி விட்டு ஊருக்கு வந்த பாலகிருஷ்ணன் தனது உறவினரைப் பார்த்து விட்டு தோழியுடன் அரும்பாக்கம் வழியாகத் நேற்றிரவு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஜல்லிக் கலவை லாரியை முந்திச் செல்ல முயன்றபோது திடீரென வழுக்கி லாரிக்கு அடியில் விழுந்தார்.

இதில் லாரி மோதியதில் பாலகிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.