​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் வீசிய புழுதிப் புயல்

Published : May 15, 2019 7:14 AM



சீனாவின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் வீசிய புழுதிப் புயல்

May 15, 2019 7:14 AM

சீனாவில் ஏற்பட்ட புழுதிப் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட மங்கோலியாவின் ஸிலிங்கோல் ((Xilingol)) என்ற இடத்தில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு எழும்பிய மணல் துகள்களால் மக்கள் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்த புழுதிப் புயலால் பாவ்டோ, ஹிங்கான் லீக் ((Baotou, Hinggan League)) உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.