​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோடை விடுமுறையில் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி - அமைச்சர் செங்கோட்டையன்

Published : Apr 13, 2018 9:59 PM

கோடை விடுமுறையில் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி - அமைச்சர் செங்கோட்டையன்

Apr 13, 2018 9:59 PM

கோடை விடுமுறையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  கோபிச்செட்டிப் பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பாடத்திட்டத்தை செயல்படுத்தத் தக்க வகையில் ஜூன் மாதம் முதல் தேதியே பள்ளிகள் திறக்கப்படுவதாக கூறினார். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அடுத்த மாதம் 2 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.