​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரி உயர்வை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம்

Published : May 14, 2019 8:24 PM

அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரி உயர்வை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம்

May 14, 2019 8:24 PM

இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கான வரி உயர்வை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் அளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆகும் 29 பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. கடந்த ஆண்டு பல்வேறு கட்டங்களில் வரி உயர்வு முடிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இம்முறை நிச்சயம் அமல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுவந்தது.

அல்மோண்ட்ஸ், வால்நட்ஸ் உள்ளிட்ட பொருட்களுக்கான காலக்கெடுவும் மே 16ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், வரி உயர்வானது தற்போது அமல்படுத்தப்படாது எனவும், ஒரு மாதம் காலநீட்டிப்பு செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.