​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாணவியின் ‘கலெக்டர்’ கனவுக்கு வித்திட்ட மாவட்ட ஆட்சியர்

Published : May 14, 2019 6:48 PM



மாணவியின் ‘கலெக்டர்’ கனவுக்கு வித்திட்ட மாவட்ட ஆட்சியர்

May 14, 2019 6:48 PM

கலெக்டராக வேண்டும் என்ற மாணவியின் கனவுக்கு வித்திடும் வகையில், கரூர் மாவட்ட ஆட்சியர் மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 6ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவி மனோப்பிரியா, தனது விடைத்தாளில் ‘ எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மாவட்ட ஆட்சியராக விரும்புவதாகவும், அதுவும் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை போல இருக்க விரும்புவதாகவும் எழுதியிருந்தார்.

மாணவியின் தேர்வு தாளை திருத்திய பட்டதாரி ஆசிரியர், அதனை மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் மாணவி மனோப்பிரியா உள்பட அப்பள்ளியை சேர்ந்த சில மாணவர்களை தனது அறைக்கு வரவழைத்த மாவட்ட ஆட்சியர், அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி உரையாடினார்.

அப்போது மாவட்ட ஆட்சியராக விரும்பிய மாணவி மனோப்பிரியாவை தனது இருக்கையில் அமரவைத்த அவர், எதிர்காலத்தில் ஆட்சியராக வந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என வாழ்த்தினார்.