​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாற்றுக்களை சேதப்படுத்தி குழாய்கள் பதிப்பு... விவசாயிகள் கவலை

Published : May 14, 2019 6:44 PM

நாற்றுக்களை சேதப்படுத்தி குழாய்கள் பதிப்பு... விவசாயிகள் கவலை

May 14, 2019 6:44 PM

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நாற்றுகளை சேதப்படுத்தி குழாய்கள் பதிக்கும் பணியில் கெயில் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக  விவசாயிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

காளகஸ்தினாதபுரம் கிராமத்தில் கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாதானத்தில் இருந்து மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தொலைவுக்கு இப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி பணிகள் நடப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாற்றுக்களை பாழ்படுத்தி எரிவாயுக் குழாய்களை அமைப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி செம்பனார் கோவில் போலீசில் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.