​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கைது செய்யப்பட்ட பொறியாளர் கடந்த 2016 முதல் இந்தியா கண்காணித்து வந்த நபர் என தகவல்

Published : May 14, 2019 6:42 PM

கைது செய்யப்பட்ட பொறியாளர் கடந்த 2016 முதல் இந்தியா கண்காணித்து வந்த நபர் என தகவல்

May 14, 2019 6:42 PM

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்களில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பொறியாளரை இந்தியா ஏற்கனவே கண்காணித்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஈஸ்டர் தினத்தின் போது இலங்கையில் தற்கொலை படையினர் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவியதாக ஆதில் அமீஸ் என்ற 24 வயது மென்பொருள் பொறியாளரை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த 4 நாட்களுக்கு பிறகு இலங்கை போலீசார் கைது செய்தனர். ஆதில் காவல் துறை பாதுகாப்பில் இருக்கும் நிலையில், அவரை முன்னதாகவே இந்திய புலனாய்வு அமைப்பு கண்காணித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆதிலுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கடந்த 2016ம் ஆண்டு முதல் அவரை இந்தியா கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையதாக சோதனை நடத்தப்பட்ட இலங்கையின் விர்டுசா ((Virtusa))  ஐடி நிறுவனத்தில் ஆதில் சில மாதங்கள் பயிற்சி ஊழியராக இருந்தது குறிப்பிடத்தக்கது.