​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு

Published : May 14, 2019 3:42 PM



ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு

May 14, 2019 3:42 PM

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன்பு வரும் 21 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் ஆலோசனைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த கூட்டம் ரத்தாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் சந்திரபாபுநாயுடுவுடன் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அமராவதி நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தேர்தல் முடிவுக்குப் பிந்தைய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சந்தித்துப் பேசிய பின் நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.