​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டத்தில் தேர்தல் குறித்து தீர்மானம்

Published : May 14, 2019 3:09 PM

நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டத்தில் தேர்தல் குறித்து தீர்மானம்

May 14, 2019 3:09 PM

நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவது தொடர்பாக, செயற்குழு தீர்மானம், சங்க பொறுப்புகள், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பத்மநாபனிடம் ஒப்படைக்கப்படும் என, நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்திருக்கிறார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் கருணாஸ், நடிகை குட்டி பத்மினி, நடிகர்கள் ராஜேஷ், மோகன், பூச்சி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் நாசர், சங்கத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததால், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம், நடிகர் சங்க பொறுப்புகள், முழுமையாக ஒப்படைக்கப்படும் என்றார்.

தேர்தல் தொடர்பான செயற்குழு கூட்ட தீர்மானம் ஒப்படைக்கப்படும் என்றும், நடிகர் சங்கத் தேர்தல் குறித்தும், அதுநடைபெறும் நாள் குறித்தும், நீதிபதி பத்மநாபன் அறிவிப்பார் என்றும் நாசர் தெரிவித்தார்.