​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயம்பேடு, அசோக்நகரில் நாலரை டன் மாம்பழங்கள் பறிமுதல்

Published : May 14, 2019 3:08 PM

கோயம்பேடு, அசோக்நகரில் நாலரை டன் மாம்பழங்கள் பறிமுதல்

May 14, 2019 3:08 PM

சென்னையில் மாம்பழப் பெட்டிகளில் எத்திலின் பாக்கெட்டுகளை நேரடியாக வைத்து பழுக்கவைக்கப்பட்டதாக சென்னை கோயம்பேட்டில் 4 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கார்பெட் கற்களுக்குப் பதில் பழங்களைப் பழுக்கச் செய்ய எத்திலின் பாக்கெட்டுகளை பயன்படுத்த உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரைத்தது. ஆனால் பழப் பெட்டிகளுக்குள் எத்திலின் பாக்கெட்டுகளை நேரடியாக வைக்கக் கூடாது என்றும் வேறு டப்பாக்களுக்குள் வைத்து வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், எத்திலின் பாக்கெட்டுகளை பழப்பெட்டிகளில் நேரடியாக வைத்து பழுக்கச் செய்தது தெரிய வந்ததையடுத்து 4 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். அதேபோன்று அசோக் நகரில் உள்ள ஒரு பழக்கடையில் சோதனை மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.