​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 92 பொறியியல் கல்லூரிகள்

Published : May 14, 2019 12:04 PM

உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 92 பொறியியல் கல்லூரிகள்

May 14, 2019 12:04 PM

உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை பாதியாக குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி நிறுவன பேராசிரியர்கள் 170 பேர் குழுவை அண்ணா பல்கலைக்கழகம் அமைத்தது. தமிழகம் முழுவதும் 537 பொறியியல் கல்லூரிகளின் தரம், பேராசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் உள்ளிட்டவற்றை இந்தக் குழு நேரில் ஆய்வு செய்தது. 

அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் ஆகிய விதிகளை பூர்த்தி செய்த 287 பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

விதிகளை பூர்த்தி செய்யாத 250 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து நிபந்தனைகளை பூர்த்தி செய்த மேலும் 158 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளிக்கப்பட்டது .

கால அவகாசம் விதித்தும் நிபந்தனைகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாத 92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை பாதியாகவும், 53 கல்லூரிகளில் 75 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.