​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது அ.தி.மு.க. உறுப்பினர் புகார்

Published : May 13, 2019 9:33 PM

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது அ.தி.மு.க. உறுப்பினர் புகார்

May 13, 2019 9:33 PM

கொலை முயற்சி புகாரில் பண்ருட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவருடைய கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தன் மீதும் தனது நண்பர் மீதும், அதிமுக பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா மற்றும் அவருடைய கணவர் பன்னீர்செல்வம், அவர்களின் ஆதரவாளர்கள், உள்ளிட்டோர் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுதாரனின் புகாரின் பேரில், கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆபாச வார்த்தைகளில் திட்டுதல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் கடலூர் மாவட்ட புதுப்பேட்டை காவல்துறை நான்கு வாரத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.